TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 10

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 10

81. 'மாசற்றார்' என்பதன் பொருள்

சரியான வினாச்சொல்லை தேர்ந்தெடு.

(A) எது?               (C) எவை?

(B) என்ன?         (D) யாது?

(D) யாது?

 

82. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

இது மிகக் கடினமான பணி மற்றவர்களுக்கு …………………. தெரிந்தது?

(A) யாது               (C) யார்

(B) யாவை          (D) எப்படி

(D) எப்படி

 

83. உரிய இடங்களில் பொருத்தமான நிறுத்தற்குறிகளை இடுக. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.

(A) "ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது” என்று என் தந்தை சொன்னார்.

(B) 'ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது' என்று என் தந்தை சொன்னார்.

(C) "ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது" என்று என் தந்தை சொன்னார்.

(D) 'ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது' என்று என் தந்தை சொன்னார். 

(C) "ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், கடிதம் எழுது" என்று என் தந்தை சொன்னார்.

 

84. சரியான நிறுத்தற்குறியிடப்பட்டத் தொடரைக் கண்டறிக.

(A) வேலன் கடைக்குச் சென்றான். பொருள்களை வாங்கினான். வீடு திரும்பினான்.

(B) வேலன் கடைக்குச் சென்றான். பொருள்களை வாங்கினான், வீடு திரும்பினான்.

(C) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.

(D) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான். வீடு திரும்பினான். 

(C) வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.

 

85. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக:

சூரியன் ………………. நேரத்தில் நான் பொருளை …………….. வைத்தேன்.

(A) மறைந்த, மறைத்து          (C) மரைந்த, மறைத்து

(B) மறைத்து, மறைந்த          (D) மரைத்து, மறைந்த

(A) மறைந்த, மறைத்து

 

86. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.

(A) தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத் தணிந்தது.

(B) மெல்ல மெல்லத் தணிந்தது தீயின் ஜ்வாலை

(C) தீயின் ஜ்வாலை மெல்லத் மெல்ல தணிந்தது

(D) தணிந்தது தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத். 

(A) தீயின் ஜ்வாலை மெல்ல மெல்லத் தணிந்தது.

 

87. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்: முளையிலே விளையும் தெரியும் பயிர்

(A) விளையும் முளையிலே தெரியும் பயிர்

(B) பயிர் தெரியும் விளையும் முளையிலே

(C) விளையும் பயிர் முளையிலே தெரியும்

(D) முளையிலே பயிர் தெரியும் விளையும் 

(C) விளையும் பயிர் முளையிலே தெரியும்

 

88. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

(A) தேன்மொழி திருக்குறள் கற்றாள்.

(B) தேன்மொழியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது.

(C) தேன்மொழி திருக்குறள் கற்பித்தாள்.

(D) தேன்மொழி திருக்குறள் கற்பிக்கவில்லை. 

(A) தேன்மொழி திருக்குறள் கற்றாள்.

 

89. பொருந்தா இணையைக் கண்டறிக.

I. நீங்கள் கட்டளையிடுங்கள்    - செய்வினை

II. சட்டி உடைந்து போயிற்று     - செயப்பாட்டு வினை

III. அவன் திருந்தினான்               - தன்வினை

IV. வெந்நீர் ஆறுகிறது                  - பிறவினை

 

(A) II

(B) IV

(C) I

(D) III

(B) IV

 

90. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

(A) பிறவினை            (C) செய்வினை

(B) தன்வினை            (D) செயப்பாட்டு வினை

(C) செய்வினை

 

91. 'ஆட்டு' எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவென கண்டறிக.

(A) கூட்டம்        (C) நிரை

(B) மந்தை         (D) கொட்டில்

(B) மந்தை

 

92. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல். (வினை மரபு)

'கூடை' எனும் சொல்லுடன் இணைந்து வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.

(A) முடைந்தார்          (C) செய்தார்

(B) பின்னினார்           (D) நெய்தார்

(A) முடைந்தார்

 

93. தை, மா, வீடு, நகரம் - இச்சொற்களை இணைத்து வரும் புதிய சொற்களில் பொருத்தமுடைய சொல் எதுவெனக் கண்டறிக.

(A) தைமா                  (C) தைவீடு

(C) மாநகரம்             (D) தைநகரம்

(C) மாநகரம்

 

94. பொருத்தமான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.

கருமேகங்கள் வானில் திரண்டன. ……………………… மழை பெய்யவில்லை.

(A) ஏனெனில்            (C) ஆயினும்

(B) ஆகவே                  (D) எனவே

(C) ஆயினும்

 

95. சரியான இணைப்புச் சொல் எழுதுக.

அதிக அளவில் மரங்களை வளர்ப்போம் …………………. மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.

(A) எனவே                   (C) ஆகையால்

(B) ஏனெனில்             (D) அதுபோல

(B) ஏனெனில்

 

96. கலைச்சொற்களை அறிக.

Storm

(A) புயல்                      (C) சுழல் காற்று

(B) சூறாவளி             (D) நிலக்காற்று

(A) புயல்

 

97. சரியான கலைச் சொல்லால் பொருத்துக.

(a) Entrepreneur       1. பண்டம்

 (b) Adulteration       2. பயணப் படகுகள்

(c) Ferries                 3. கலப்படம்

(d) Commodity         4. தொழில்முனைவோர்

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B) 3 4 1 2

(C) 2 1 3 4

(D) 4 2 1 3

(A) 4 3 2 1

 

98. சரியான கலைச்சொல் யாது?

Excavation

(A) கல்வெட்டியல்        (C) நடுகல்

(C) அகழாய்வு                (D) புடைப்புச் சிற்பம்

(C) அகழாய்வு

 

99. பிழைத்திருத்தம் - (ஒரு ஓர்)

சரியானத் தொடரைத் தேர்ந்தெடு.

(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

(B) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

(C) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

(D) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

(D) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

 

100. பிழை திருத்துதல்:

சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு.

(A) கல்வி ஒரு அணிகலன்          (C) கல்வி ஒன்னு அணிகலன்

(B) கல்வி ஒன்று அணிகலன்     (D) கல்வி ஓர் அணிகலன்

(D) கல்வி ஓர் அணிகலன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top