TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 11

Mr. A M
0

 

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 11

1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு

சீரிய - சீறிய

(A) கோபம் கொண்ட     - பெருமை பெற்ற

(B) சிறுமை கொண்ட     - பெருமை பெற்ற

(C) அளவில் குறைந்த    - வடிவில் குறைந்த

(D) பெருமை பெற்ற      - கோபம் கொண்ட

(D) பெருமை பெற்ற - கோபம் கொண்ட

 

2. இரு வினைகளின் பொருள் வேறுபாடு

ஈந்தாள் - ஈன்றாள்

(A) கொடுத்தாள்          - பெற்றெடுத்தாள்

(B) பெற்றெடுத்தாள்  - கொடுத்தாள்

(C) கேட்டாள்                - கொடுத்தாள்

(D) கண்டாள்             - கேட்டாள்

(A) கொடுத்தாள் - பெற்றெடுத்தாள்

 

3. பொருள் வேறுபாடு அறிக.

பொழிகின்ற - பொலிகின்ற

(A) தருகின்ற             - சிறந்து விளங்குகின்ற

(B) செல்கின்ற          - வருகின்ற

(C) வாங்குகின்ற      - விற்கின்ற

(D) தாக்குகின்ற       - தாங்குகின்ற

(A) தருகின்ற  - சிறந்து விளங்குகின்ற

 

4. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:

'வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்'

(A) பரணி பகைவரை ஆகும் இலக்கியம் வென்றதைப்பாடும்

(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்

(C) இலக்கியம் ஆகும் வென்றதைப் பரணி பாடும்

(D) பாடும் இலக்கியம் வென்றதைப் பரணி ஆகும்

(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்

 

5. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்: சொற்களை ஒழுங்குபடுத்துக

(A) கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்

(B) கழுத்து உயிரெழுத்து இடம் பிறக்கும் ஆகும்

(C) உயிரெழுத்து கழுத்து ஆகும் பிறக்கும் இடம்

(D) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்

(D) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்

 

6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

(A) அள்ளல் அரக்காம்பல் வாயவிழ பழனத்து

(B) பழனத்து அரக்காம்பல் வாயவிழ அள்ளல்

(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ

(D) வாயவிழ பழனத்து அரக்காம்பல் அள்ளல்

(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ

 

7. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி

(A) ஓவியர், ஓசுநர், காருகர், பாசவர், சிற்பி

(B) காருகர், பாசவர், சிற்பி, ஓசுநர், ஓவியர்

(C) ஓசுநர், ஓவியர், காருகர், பாசவர், சிற்பி

(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்

(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்

 

8. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை

(B) ஊக்கம், ஒளவை, ஏது, ஈதல்

(C) ஈதல், ஊக்கம், ஒளவை, ஏது

(D) ஏது, ஈதல், ஒளவை, ஊக்கம்

(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை

 

9. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையாலணையும் பெயர் உருவாக்கல்:

'ஒறுத்தல்'- வினையாலணையும் பெயர் காண்க.

(A) ஒறுத்தினேன்         (C) ஒன்றுதல்

(B) பொறுத்தல்             (D) ஒறுத்தார்

(D) ஒறுத்தார்

 

10. 'மலை' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க:

(A) மலைந்து      (C) மலையா

(B) மலைந்த       (D) மலையும்

(A) மலைந்து

 

11. வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரை எழுதுக:

'கொடு'

(A) கொடுத்தான்    (C) கொடுத்தல்

(B) கொடுத்த       (D) கொடுத்தவன்

(C) கொடுத்தல்

 

12. வந்தனன் – வேர்ச்சொல்லை எழுதுக:

(A) வருக          (C) வா

(B) வந்து          (D) வருவாய்

(C) வா

 

13. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக:

'வருக'

(A) வா            (C) வந்து

(B) வரு           (D) வருகிறார்

(A) வா 

 

14. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

'நிலவு'

(A) மதி, அறிவு         (C) திங்கள், சந்திரன்

(B) மாதம், பிறை   (D) நிலா, அறிவு

(C) திங்கள், சந்திரன்

 

15. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

அடி வகை'

(A) தாள், தண்டு, கோல்

(B) சுவை, கொம்பு, கொப்பு

(C) இலை, தோகை, ஓலை

(D) துளிர், முறி, குருத்து

(A) தாள், தண்டு, கோல்

 

16. ஒரு பொருள் தரும் பலச் சொற்கள்:

உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை

(A) நீர் நிலை        (C) கொடி வகை

(B) ஊர் வகை      (D) கடல் வகை

(A) நீர் நிலை

 

17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்:

அமைதியான ……………. தேவை.

(A) உரக்கம்        (C) உறக்கம்

(B) துரக்கம்        (D) துறக்கம்

(C) உறக்கம்

 

18. லை, இளை, இழை - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

(A) செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை

(B) மெலிந்து போதல், செடியின் காம்பு, செடியின் இலை

(C) நூல் இழை, செடியின் இலை, மெலிந்து போதல்

(D) மெலிந்து போதல், நூல் இழை, செடியின் இலை

(A) செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை

 

19. பரவை, பறவை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக:

(A) வானில் பரப்பது, எருது            (C) கடல், புள்

(B) சிங்கம், கடல்                               (D) ஆண்மயில், கடல்

(C) கடல், புள்

 

20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:

'டிமாண்ட் டிராப்ட்'

(A) காசோலை        (C) வரைவோலை

(B) பணவோலை   (D) கடன் அட்டை

(C) வரைவோலை

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top