TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 9
61. 'விண்டோஸ்' கலைச்சொல் தருக.
(A) தொடுதிரை (C) பலகணி
(B) சாளரம் (D) வான்உலவி
(C) பலகணி
62. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
"அறனல்ல செய்யாமை நன்று"
(A) எச்செயலை செய்யாமல் இருப்பது நன்று?
(B) அறம் என்றால் என்ன?
(C) அறனல்ல செய்யாமை நன்றா?
(D) எச்செயல்களை செய்வது நன்று?
(A) எச்செயலை செய்யாமல் இருப்பது நன்று?
63. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
வினா ஆறு வகைப்படும்.
(A) வினா எத்துனை வகைப்படும்?
(B) வினா எப்படி வகைப்படும்?
(C) வினா எத்தனை வகைப்படும்?
(D) வினா எவ்வளவு வகைப்படும்?
(C) வினா எத்தனை வகைப்படும்?
64. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
"சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்திற்கு சாகித்திய அகாதமி
விருது கிடைத்தது.
(A) சாகித்திய அகாதமி விருது எந்த புதினத்திற்கு கிடைத்தது?
(B) சாகித்திய அகாதமி விருது எந்த திரைப்படத்திற்கு கிடைத்தது?
(C) சாகித்திய அகாதமி விருது எந்த கவிதைக்கு கிடைத்தது?
(D) சாகித்திய அகாதமி விருது எந்த நாடகத்திற்கு கிடைத்தது?
(A) சாகித்திய அகாதமி விருது எந்த புதினத்திற்கு கிடைத்தது?
65. சரியான இணையைத் தேர்ந்தெடு:
(A)
Lexicography - அகராதியியல்
(B)
Epigraph - சித்திர எழுத்து
(C)
Pictograph - கல்வெட்டு
(D)
Articulatory Phonetics - ஒலியன்
(A) Lexicography - அகராதியியல்
66. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்ட சரியான இணையைத்
தேர்ந்தெடு.
(A) ஜனப் பிரளயம் - மக்கள் அலை
(B) ஜனப் பிரளயம் - உயிர் அலை
(C) ஜனப் பிரளயம் - மக்கள் வெள்ளம்
(D) ஜனப் பிரளயம் - மக்கள் அவை
(C) ஜனப் பிரளயம் - மக்கள் வெள்ளம்
67. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) நிபுணர் -வல்லுநர் (C)
நிபுணர் - இயந்திரர்
(B) நிபுணர் - பேச்சாளர் (D)
நிபுணர் - மேன்மையாளர்
(A) நிபுணர் -வல்லுநர்
68. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்:
விரிந்தது - விரித்தது
சரியான பொருள் தரும் வாக்கியத்தைக் கண்டறிக.
(A) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன.
மயில் தோகையை விரித்தது.
(B) பூவின் இதழ்கள் மழைக்காற்று வீசியதால் விரித்தது. மயில் தோகையை
விரிந்தன.
(C) மழைக்காற்று வீசியதால் பூவின் இதழ்கள் விரித்தது. மயில் தோகையை விரிந்தன.
(D) மயில் தோகையை விரிந்தன. மழைக்காற்று வீசியதால்
பூவின் இதழ்கள் விரித்தது.
(A) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன. மயில் தோகையை விரித்தது.
69. இருவினைகளின் பொருள் வேறுபாடறிதல்:
பணிந்து - பணித்து
சரியான வாக்கியத்தைக் கண்டறிக.
(A) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு
அதிகாரிகளை பணித்தார்
(B) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை
வழங்குமாறு அதிகாரிகளை பணிந்தார்
(C) தாயின் பாதம் பணித்தார் உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் பணிந்தார் (D)
தாயின் பாதம் பணித்து ஆசி பெற்றதால் உதவித்தொகையை வழங்க
இயலவில்லை
(A) தாயின் பாதம் பணிந்து ஆசி பெற்றேன். அமைச்சர் உதவித்தொகையை வழங்குமாறு அதிகாரிகளை பணித்தார்
70. பொருத்துக
சொல் பொருள்
(a) பொக்கிஷம் 1. அழகு
(b) சாஸ்தி 2. செல்வம்
(c) விஸ்தாரம் 3. மிகுதி
(d) சிங்காரம் 4. பெரும் பரப்பு
(a) (b) (c) (d)
(A) 2
1 4 3
(B) 1
2 3 4
(C) 4
3 2 1
(D) 2
3 4 1
(D) 2 3 4 1
71.'கந்தம்' என்பதன் பொருள் யாது?
(A) கவலை (C) மணம்
(B) மேல் (D) மனம்
(C) மணம்
72. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான
இணையைத் தேர்க.
கொள் - கோள்
(A) வாங்கு - புறங்கூறல்
(B) புறங்கூறல் - வாங்கு
(C) கொல்லுதல் - வாங்கு
(D) வாங்கு - கொல்லுதல்
(A) வாங்கு - புறங்கூறல்
73. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான
விடையைத் தெரிவு செய்க.
நடு,நாடு
(A) தேடு, தேசம் (C) நிலப்பகுதி, தேடு
(B) ஊன்று, விரும்பு (D) மத்தியில், அரசு
(B) ஊன்று, விரும்பு
74. சரியான இணையைக் கண்டறிக:
(A) அளை - தயிர், பிசை
(C) அளை அழை, அலை
(B) அளை - பிசை, களை
(D) அளை - கூவி, அடை
(A) அளை - தயிர், பிசை
75. 'திணை' எனும் சொல்லின் இருபொருள்களில் சரியான இணையைக்
கண்டறிக.
(A) தானியம், நிலம் (C) ஒழுக்கம், நிலம்
(B) வலிமை, நிலம் (D) ஒழுக்கம், தீமை
(C) ஒழுக்கம், நிலம்
76. 'நாடி'- இருபொருள் தருக.
(A) ஆராய்ந்து - தேடி (C) ஓடி-பார்த்து
(B) எடுத்து - தொகுத்து (D) வகுத்து - விரித்து
(A) ஆராய்ந்து - தேடி
77. நாங் கெளம்பிட்டேன் - என்பதற்கான சரியான எழுத்து
வழக்கைக் கண்டறிக.
(A) நான் கெளம்பிட்டேன்
(B) நான் ரெடியாகி விட்டேன்
(C) நான் புறப்பட்டு விட்டேன்
(D) நான் இடம்பெயர்ந்து விட்டேன்
(C) நான் புறப்பட்டு விட்டேன்
78. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றியதைக் கண்டறி. அவனெக்
கூட்டிக்கிட்டு வர்றேன்.
(A) அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்
(B) அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்
(C) அவனை இழுத்துக்கொண்டு வருகிறேன்
(D) அவனோடு வருகிறேன்
(B) அவனை அழைத்துக்கொண்டு வருகிறேன்
79. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
வைகறைக்குரிய கால அளவு
(A) யாவை? (C) எது?
(B) என்ன? (D) யாது?
(D) யாது?
80. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன
(A) எது? (C) யாது?
(B) என்ன? (D) யாவை?
(D) யாவை?