TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 6

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 6


1. எதிர்ச் சொற்களைப் பொருத்துக.

(a) அணுகு      1. தெளிவு

(b) ஐயம்          2. சோர்வு

(c) ஊக்கம்     3. பொய்மை

(d) உண்மை  4. விலகு

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 2 3 4 1

(c) 4 1 2 3

(D) 2 1 3 4

(c) 4 1 2 3

 

2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.

(A) வடு                         (C) கருக்கல்

(B) குரும்பை             (D) கொப்பு

(D) கொப்பு

 

3. பொருந்தா மரபுத் தொடரைக் கண்டறிக.

(A) தள்ளிவைத்தல்         (C) ஆறப்போடுதல்

(B) அள்ளி இறைத்தல்    (D) மனக்கோட்டை

(A) தள்ளிவைத்தல்

 

4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) இன்பம்              (C) அறம்

(B) பொருள்             (D) அருள்

(D) அருள்

 

5. சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

(A) நமது நாட்டின் பாரம்பரிய சின்னங்களை பாதுக்காப்பேன்

(B) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களை பாதுக்காப்பேன்

(C) நமது நாட்டின் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பேன்

(D) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன் 

(D) நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்

 

6. மரபுப் பிழைகள் ஒலி மரபு.

கோழி

(A) கொக்கரிக்கும்         (B) கூவும்

(C) அகவும்                         (D) அலறும்

(A) கொக்கரிக்கும்

 

7. விலங்குகளின் மரபுப் பெயரை ஒட்டி கீழ்கண்டவற்றுள் பொருத்தமான சொல்லை இணைக்க.

புலி ………………

(A) குட்டி                (C) கன்று

(C) பறழ்                 (D) குருளை

(C) பறழ்

 

8. முறி, குருத்து, கொழுந்தாடை முதலிய சொற்கள் தாவரத்தின் பகுதியைக் குறிக்கும்.

(A) நுனிப்பகுதி           (C) கிளை

(B) இலை                        (D) வேர்

(A) நுனிப்பகுதி

 

9. அழகு என்னும் சொல்லைக் குறிக்கும் சரியான பிறச்சொற்களைக் கண்டறிக.

(A) பெண் மயில், அன்னம்

(B) கவின், வனப்பு

(C) பறவையின் மூக்கு, பச்சைக்கிளி

(D) சோலை, அருவி

(B) கவின், வனப்பு

 

10. அகர வரிசையில் சொற்களை நிரல்படுத்துக.

(A) தேங்காய், பழம், பாக்கு, பூ, வெற்றிலை

(B) பாக்கு, வெற்றிலை, தேங்காய், பழம், பூ

(C) பூ, பாக்கு, பழம், வெற்றிலை, தேங்காய்

(D) வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய்

(A) தேங்காய், பழம், பாக்கு, பூ, வெற்றிலை

 

11. இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.

(A) உறுமி, தவில், மகுடி, உடுக்கை

(B) உடுக்கை, உறுமி, தவில், மகுடி

(C) உறுமி, தவில், உடுக்கை, மகுடி

(D) உடுக்கை, உறுமி, மகுடி, தவில் 

(B) உடுக்கை, உறுமி, தவில், மகுடி

 

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.

கான் காண்

(A) காடு - வனம்             (C) காடு - பார்

(B) பாடல்உணவு        (D) கருமை - மேகம்

(C) காடு - பார்

 

13. சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

(A) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன

(B) மானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன

(C) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன

(D) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றது 

(C) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன

 

14. சரியான தொடரைத் தேர்வு செய்க.

(A) ஆற்றின் வளப்புறம் உல்ல வயல்கள் நீர் வளத்தால் செழித்திருந்தன.

(B) ஆற்றின் வளப்புறம் உள்ள வயல்கல் நீர் வலத்தால் செலித்திருந்தன.

(C) ஆற்றின் வலப்புரம் உள்ள வயள்கல் நீர் வளத்தால் செழித்திருந்தன.

(D) ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன. 

(D) ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன.

 

15. "நின்றான்" - என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.

(A) நில்             (C) நின்று

(B) நின்            (D) நில்லு

(A) நில்

 

16. வேர்ச்சொல்லைக் காண்க: 'சுடுதல்'

(A) சுடு            (C) சுடுக

(B) சூடு            (D) சுட்ட

(A) சுடு

 

17. வந்தான் - என்பதன் வேர்ச்சொல்லைக் காண்க.

(A) வந்த           (C)

(B) வந்து          (D) வா

(D) வா

 

18. 'தா' எனும் வேர்ச்சொல்லின் வினையெச்ச சொல் எதுவெனக் கண்டறிக.

(A) தருதல்          (C) தந்தவர்

(B) தந்த               (D) தந்து

(D) தந்து

 

19. 'கானல் நீர்' எனும் உவமை தரும் பொருள் எதுவென கண்டறிக

(A) இயலாத செயல்

(B) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது

(C) நீண்டகாலமாக இருப்பது

(D) எண்ணியது நிகழாமை

(B) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது

 

20. பாடு - என்பதன் பெயரெச்சத்தை தேர்க.

(A) பாடுதல்        (C) பாடினேன்

(B) பாடிய            (D) பாடியவர்

(B) பாடிய

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top