TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 5

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 5

81. சரியான இணைப்புச் சொல் தேர்க:

காயிதேமில்லத்தின் இயற்பெயர் முகம்மது இசுமாயில். மக்கள் அவரை அன்போடு

'காயிதே மில்லத்' என்று அழைத்தனர்.

(A) ஏனெனில்            (C) இல்லையென்றால்

(B) ஆனால்                 (D) மேலும்

(B) ஆனால்

 

82. சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு.

குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது

காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

(A) ஆகையால்           (C) எனவே

(B) அது போல             (D) ஏனெனில்

(A) ஆகையால்

 

83. சரியான இணைப்புச் சொல் தருக.

தீபஒளித் திருநாளில் பட்டாசு அதிகம் வெடித்தனர் ……………… காற்று மாசு அடைந்தது.

(A) அதனால்       (C) இல்லையென்றால்

(B) மேலும்            (D) ஏனெனில்

(A) அதனால்

 

84. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்.

…………………. துன்பப்பட நேரிடும்.

(A) எனவே                (C) இல்லையென்றால்

(B) ஆகையால்       (D) மேலும்

 

(C) இல்லையென்றால்

 

85. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

திருக்குறளை இயற்றியவர்

(A) எத்தனை       (C) யார்

(B) எது                    (D) எப்போது

(C) யார்

 

86. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

"தமிழழகனாரின் இயற்பெயர்

(A) எப்படி         (C) எவ்வாறு

(B) என்ன          (D) எங்கு

(B) என்ன

 

87. காலமறிந்து பொருத்துக.

(a) நான்                    1. முன்னேறினான்

(b) பொன்னன்      2. கேட்பாள்

(c) அவள்                 3. வருகிறார்

(d) அவர்                  4. சென்றேன்

 

(a) (b) (c) (d)

(A) 2 3 1 4

(B) 3 1 2 4

(C) 4 1 2 3

(D) 2 4 1 3

(C) 4 1 2 3

 

88. தவறான வினாவைத் தேர்ந்தெடு.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றார்.

(A) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

(B) பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்கு சென்றாள்?

(C) பூங்கொடி பள்ளிக்கு ஏன் சென்றாள்?

(D) திங்கள் கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்றது யார்?

(C) பூங்கொடி பள்ளிக்கு ஏன் சென்றாள்?

 

89. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

பின்வரும் சொற்களில் 'புல்' என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லைத் தரும் சொல்லைக் கண்டறிக.

(A) வெளி          (C) கால்

(B) கண்             (D) காள்

(A) வெளி

 

90. பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக. இப்ப ஒசரமா வளந்துட்டான்.

(A) இப்போது ஒசரமா வளர்ந்துட்டான்

(B) இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான்

(C) இப்பொழுது ஒசரமா வளர்ந்திட்டான்

(D) இப்போது உயரமா வளந்துட்டான்

(B) இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான்

 

91. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று. வீரப்பன் ஒரு கடுதாசி குடுத்தான்.

(A) வீரப்பன் ஒரு கஷாயம் குடித்தான்

(B) வீரப்பன் ஒரு கடிதம் குடுத்தான்

(C) வீரப்பன் ஒரு கடுதாசி கொடுத்தான்

(D) வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்

(D) வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்

 

92. மாலை-என்பதன் இருபொருள் தருக.

(A) ரோஜாப்பூ, மல்லிகை

(B) பூமாலை, அந்திப்பொழுது

(C) மலையோரம், மாலை

(D) காலை, மாலை

(B) பூமாலை, அந்திப்பொழுது

 

93. இரு பொருள் தருக.

சரியான இருபொருள் இணையைத் தேர்ந்தெடு - "ஓவியம்"

(A) காகிதம், வண்ணம்

(B) படம், தாள்

(C) அழகு, புலவர்

(D) சித்திரம், படம்

(D) சித்திரம், படம்

 

94. குறில் நெடில் அடிப்படையில் தவறான இணையைக் கண்டறிக.

வீடு - விடு

பெறு - பேறு

கோள் - கேள்

மின்  - மீன்

(A) விடு – வீடு         (C) கோள் - கேள்

(B) பெறு – பேறு    (D) மின் – மீன்

(C) கோள் - கேள்

 

95. குறில் நெடில் வேறுபாடு உணர்த்தும் பொருந்திய இணையைத் தேர்க.

பரி - பாரி

(A) வள்ளல்        - குதிரை

(B) குதிரை        - வள்ளல்களில் ஒருவர்

(C) யானை        - வள்ளல்களில் ஒருவர்

(D) பொன்         - மழை

(B) குதிரை          - வள்ளல்களில் ஒருவர்

 

96. குறில் நெடில் வேறுபாடு உணர்ந்து பொருள் பொருந்திய தொடரைத் தேர்க.

மடு  - மாடு

(A) மது                - விலங்கு

(B) மக்கள்         - விலங்கு

(C) நீர்நிலை     - செல்வம்

(D) விலங்கு       - செல்வம்

(C) நீர்நிலை         - செல்வம்

 

97.கூற்று: நாகை மாவட்டம் செம்பியம் கண்டியூரில் மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

காரணம் 1 : கலையழகு மிகுந்த உலகின் பழமையான கலைகளுள் ஒன்று மட்பாண்டக் கலை.

காரணம் 2 : தமிழருக்கும், மண்பாண்டக் கலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் சான்றுகள்.

(A) கூற்றும் காரணம் 1 சரி 2 தவறு

(B) கூற்றும், காரணம் 1, 2ம் சரி

(C) கூற்று தவறு காரணம் 1, 2 சரி

(D) கூற்று சரி காரணம் 1 தவறு 2 சரி

(B) கூற்றும், காரணம் 1, 2ம் சரி

 

98. கலைச் சொல் அறிதல்.

Media

(A) ஊடகம்            (C) மொழியியல்

(B) ஒலியியல்       (D) இதழியல்

(A) ஊடகம்

 

99. கலைச்சொல் தருக.

Patriotism

(A) நாட்டுப்பற்று   (C) இலக்கியம்

(B) கலைக்கூடம்   (D) மெய்யுணர்வு

(A) நாட்டுப்பற்று

 

100. CONICAL STONE என்ற சொல்லுக்கு இணையான கலைச்சொல் யாது?

(A) கருங்கல்       (C) வட்டக்கல்

(B) செங்கல்        (D) குமிழிக்கல்

(D) குமிழிக்கல்

 

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top