TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 8
41. பெறற்கரிய இன்பநாடு என இங்கு குறிக்கப்படும் நாடு எது?
(A) வடநாடு
(B) கேரளம்
(C) வங்காளம்
(D) தமிழ்நாடு
(D) தமிழ்நாடு
42. பசியின்றி - பிரித்தெழுதுக.
(A) பசி + யின்றி
(B) பசு + இன்றி
(C) பசி + இன்றி
(D) பசு + யின்றி
(C) பசி + இன்றி
43. சேர்த்தெழுதுக: நிலவு + என்று
(A) நிலயென்று (C) நிலவன்று
(B) நிலவென்று (D) நிலவு என்று
(B) நிலவென்று
44. சேர்த்தெழுதுதல்: புளி + சோறு
(A) புளிம்சோறு (C) புளிஞ்சோறு
(B) புளியம்சோறு (D) புளியஞ்சோறு
(C) புளிஞ்சோறு
45. பிரித்து எழுதுக: 'புளியங்கன்று'
(A) புளியங் + கன்று (C) புளி + அங் + கன்று
(B) புளி + அம் + கன்று (D) புளி + யங்கன்று
(C) புளி + அங் + கன்று
46. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக
(A) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன
(B) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தது
(C) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்கிறது
(D) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்கிறது
(A) நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன
47. கூற்று, காரணம் சரியா? தவறா?
கூற்று: வேங்கை என்பது பொது மொழியாகும்.
காரணம்: தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவதால் பொது
மொழி எனப்படும்
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று சரி; காரணம் தவறு
(C) கூற்று தவறு; காரணம் சரி
(D) கூற்று தவறு; காரணம் தவறு
(A) கூற்று சரி; காரணம் சரி
48. கூற்று - சரியா? தவறா?
கூற்று 1: ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற
புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
கூற்று 2: இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்
கன்னிமாரா நூலகம்.
கூற்று 3: உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்
கன்னிமாரா நூலகமே.
(A) கூற்று 1, 2, 3 சரி
(B) கூற்று 1, 2 சரி 3 மட்டும்
தவறு
(C) கூற்று 1 தவறு; 2, 3 சரி
(D) கூற்று 1, 3 சரி; 2 மட்டும்
தவறு
(D) கூற்று 1, 3 சரி; 2 மட்டும் தவறு
49. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (அவர்)
(A) வந்தவர் …………………… தான்
(B) வந்தவன் …………………… தான்
(C) வந்தது ……………………...... தான்
(D) வருகின்றது ……………..... தான்
(A) வந்தவர் …………………… தான்
50. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (அழகுகள்)
(A) தம்மை முதலிய ……………….. எட்டினைப் பெற்றுள்ளாய்
(B) நும்மை முதலிய ……………….. எட்டினைப் பெற்றுள்ளாய்
(C) அம்மை முதலிய ……………….. எட்டினைப் பெற்றுள்ளாய்
(D) எம்மை முதலிய ……………….. எட்டினைப் பெற்றுள்ளாய்
(C) அம்மை முதலிய ……………….. எட்டினைப் பெற்றுள்ளாய்
51. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (படித்தல்)
(A) நூலின் பயன் ………….. ஆகும்
(B) கல்வியின் பயன் ………….. ஆகும்
(C) பள்ளியின் பயன் ………….. ஆகும்
(D) வாழ்வின் பயன் ………….. ஆகும்
(A) நூலின் பயன் ………….. ஆகும்
52. பொருத்தமான காலத்தைத் தேர்ந்தெடுக்க:
வள்ளி நாளை திரைப்படம் ……………………
(A) பார்த்தாள் (C) பார்ப்பாள்
(B) பார்க்கின்றாள் (D) பாராள்
(C) பார்ப்பாள்
53. பொருந்தாத இணையைத் தேர்க:
(A) அன் - வந்தனன் (C) கு காண்குவன்
(B) இன் - முறிந்தது (D) அன் — சென்றன
(B) இன் - முறிந்தது
54. தவறான இணையைத் தேர்ந்தெடு
(A) நேற்று காலையில் சூரியன் உதிக்கும் - எதிர்காலம்
(B) மழை இப்பொழுது பெய்கிறது - நிகழ்காலம்
(C) நாளை சாப்பிடுவேன் - எதிர்காலம்
(D) நேற்றிரவு நிலா ஒளி வீசியது - இறந்தகாலம்
(A) நேற்று காலையில் சூரியன் உதிக்கும் - எதிர்காலம்
55. எல் - என்பதன் எதிர்ச்சொல் தருக.
(A) இரவு (C) காலை
(B) பகல் (D) மாலை
(A) இரவு
56. “உழவன்" எதிர்ப்பாலுக்கு உரிய சொல்
(A) உழத்தியர் (C) உழவி
(B) உழத்தி (D) நுளைச்சி
(B) உழத்தி
57. தவறான இணை எதுவெனக் கண்டறிக.
(A) தஞ்சாவூர் - தஞ்சை (C)
திருச்சிராப்பள்ளி - திருச்சி
(B) உதகமண்டலம் - உதகை (D) புதுச்சேரி - புதுகை
(D) புதுச்சேரி - புதுகை
58. கோயமுத்தூர் என்பதன் மரூஉ எதுவென கண்டறிக.
(A) முத்தூர் (B) கோவை
(B) புத்தூர் (D) கோவூர்
(B) கோவை
59. தவறான இணையைக் கண்டறிக
(A) கோவை - கோயம்புத்தூர் (C)
புதுமை - புதுக்கோட்டை
(B) குடந்தை - கும்பகோணம் (D) உதகை - உதகமண்டலம்
(C) புதுமை - புதுக்கோட்டை
60. 'லம்சம்' தமிழாக்கம் தருக.
(A) திரட்சித் தொகை (C) நிலுவைத் தொகை
(B) கையூட்டு (D) பணமுடிப்பு
(A) திரட்சித் தொகை