TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 7

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 7

21. சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. 'CONVEYOR BELT'

(A) ஊர்திப்பட்டை          (C) புறப்பாடு

(B) நுழைவுப்பட்டை      (D) வருகை

(A) ஊர்திப்பட்டை

 

22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

(A) Aesthetics - முருகியல்

(B) Discussion - உரையாடல்

(C) Tempest     - சுழல் காற்று

(D) Cosmic Rays - புற ஊதாக்கதிர்கள்

(A) Aesthetics – முருகியல்

 

23. Monolingual - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக.

(A) ஒரு மொழி           (C) தாய் மொழி

(B) தனி மொழி          (D) உயர் மொழி

(A) ஒரு மொழி

 

24. எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்.

வனப்பு

(A) காய்ந்த                   (C) வற்றிய

(B) அழகின்மை          (D) வளம் குறைந்த

(B) அழகின்மை

 

25. எதிர்ச்சொல்லை எடுத்தெழுது.

ஓர்தல்

(A) ஒழுக்கமற்ற    (C) தாழ்தல்

(B) அறிவற்ற           (D) பணிதல்

(B) அறிவற்ற

 

26. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல

(A) ஒற்றுமையின்மை    (C) தற்செயல் நிகழ்வு 

(B) பயனற்ற செயல்        (D) எதிர்பாரா நிகழ்வு

(A) ஒற்றுமையின்மை

 

27. உவமையால் விளக்கப்பெறும் கருத்தை தேர்ந்தெழுதுதல்.

கிணறு வெட்டப்பூதம் கிளம்பியது போல

(A) பயனற்ற செயல்         (C) தற்செயல் நிகழ்வு

(B) எதிர்பாரா நிகழ்வு     (D) ஒற்றுமையின்மை

(B) எதிர்பாரா நிகழ்வு

 

28. விடை வகைகள்.

"இது செய்வாயா" என்று வினவியபோது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது.

(A) சுட்டு விடை          (C) மறை விடை

(B) ஏவல் விடை          (D) இனமொழி விடை

(B) ஏவல் விடை

 

29. "கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குச் "செய்யுள் எழுதத் தெரியும்" என்று கூறுவது எவ்வகை விடை?

(A) நேர் விடை

(B) இனமொழி விடை

(C) உறுவது கூறல் விடை

(D) மறை விடை

(B) இனமொழி விடை

 

30. நீ சாப்பிடவில்லையா? என்ற வினாவிற்கு வயிறு வலிக்கும் என்று கூறுவது?

(A) நேர் விடை           (C) உற்றது உரைத்தல் விடை

(B) மறை விடை        (D) உறுவது கூறல் விடை

(D) உறுவது கூறல் விடை

 

31. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.

(A) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கிறது.

(B) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொண்டது.

(C) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றன.

(D) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றது. 

(C) உயிரினங்கள் வாழ்வதற்கான உணவை உட்கொள்கின்றன.

 

32. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.

(A) குதிரையில் இருந்து அவர் இறங்கினான்

(B) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்

(C) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்கள்

(D) குதிரையில் இருந்து அவர் இறங்கியது 

(B) குதிரையில் இருந்து அவர் இறங்கினார்

 

33. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

சரியான தொடர் எது ? கண்டறிந்து எழுதுக.

(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

(B) மாலையில் காலையில் உதித்து மறையும்

(C) கதிரவன் கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில் 

(C) கதிரவன் கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

 

34. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

நல்ல தமிழுக்கு எழுதுவோம் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) நல்ல தமிழில் எழுதுவோம்

(B) நல்ல தமிழால் எழுதுவோம்

(C) நல்ல தமிழின் எழுதுவோம்

(D) நல்ல தமிழின்கண் எழுதுவோம் 

(A) நல்ல தமிழில் எழுதுவோம்

 

35. சொல் - பொருள் பொருத்துக.

(a) கோட்டி        1. பொன்

(b) பொலம்       2. மாலை

(c) வேதிகை     3. மன்றம்

(d) தாமம்           4. திண்ணை

(a) (b) (c) (d)

 

(A) 1 3 2 4

(B) 3 1 4 2

(C) 3 4 2 1

(D) 4 1 2 3

(B) 3 1 4 2

 

36. கீழ்காணும் தொடர்களில் (ஒரு - ஓர்) சரியாக அமைந்த தொடர் எது?

(A) ஓர் மரம் தெரிகிறது

(B) ஒரு மரம் தெரிகிறது

(C) ஒரு அழகிய மரம் தெரிகிறது 

(D) ஓர் பசுமரம் தெரிகிறது

(B) ஒரு மரம் தெரிகிறது

 

37. காவிய இன்பம் ………..உரியது.

(A) தாழ்விற்கு

(B) ஓய்விற்கு

(C) வாழ்விற்கு

(D) தேய்விற்கு

(C) வாழ்விற்கு

 

38. எந்த இலக்கியங்களில் பாட்டின்பம் காணப்படுகிறது?

(A) தெலுங்கு       (C) மலையாளம்

(B) கன்னடம்       (D) தமிழ்

(D) தமிழ்

 

39. தமிழ் காவியங்களைப் படிப்பதால் நுகர்வது எது?

(A) நகைப்பு        (C) இன்பம்

(B) அச்சம்            (D) பெருமிதம்

(C) இன்பம்

 

40. இன்ப அன்பை எதனால் சொல்ல இயலாது?

(A) சொல்லால்     (C) பொருளால்

(B) எழுத்தால்       (D) யாப்பால்

(A) சொல்லால்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top