TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 3

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 3

41. அலுவல் சார்ந்த கலைச்சொல்

Volunteer - என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.

(A) சமூகப் பணியாளர்    (C) தன்னார்வலர்

(B) அறக்கட்டளை              (D) நுகர்வோர்

(C) தன்னார்வலர்

 

42. அலுவல் சார்ந்த கலைச் சொல்லை கண்டறிந்து எழுதுக.

பைல் (file)

(A) மை பொதி           (C) இழுவை முத்திரை

(B) மடிப்புத் தாள்      (D) கோப்பு

(D) கோப்பு

 

43. கலைச்சொல்லிற்கானப் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுது.

'Infrared Rays'

(A) விண்வெளிக் கதிர்கள்       (C) புற ஊதாக் கதிர்கள்

(B) புறசிவப்புக் கதிர்கள்          (D) அகச்சிவப்புக் கதிர்கள்

(D) அகச்சிவப்புக் கதிர்கள்

 

44. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல" - உவமை கூறும் பொருள் தெளிக.

(A) தெளிவு              (C) ஐயம்

(B) கடினம்              (D) கவனம்

(A) தெளிவு

 

45. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்

உடலும் உயிரும் போல

(A) வேற்றுமை           (C) நம்பிக்கை

(B) ஒற்றுமை              (D) உண்மை

(B) ஒற்றுமை

 

46. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

'தாமரை இலை நீர் போல'

(A) தாமரை இலை மேல் நீர் ஒட்டாது

(B) பாதுகாப்பின்றி அலைதல்

(C) செல்வத்துடன் வாழ்தல்

(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்

(D) ஒட்டாமலும், ஒதுங்காமலும் இருத்தல்

 

47. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

"தன் வினைத் தொடரைக் கண்டறிக."

(A) அவனைத் திருந்தச் செய்தான்

(B) அவன் திருந்தினான்

(C) பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்

(D) அப்பா சொன்னார்

(B) அவன் திருந்தினான்

 

48. தன்வினைத் தொடரைக் கண்டறிக.

(A) பந்து உருட்டியது

(B) பந்து உருண்டது

(C) பந்து உருட்ட வைத்தான்

(D) உருட்டிய பந்து

(B) பந்து உருண்டது

 

49. ஓவியம் குமரனால் வரையப்பட்டது.

 - இது எவ்வகை வாக்கியம்.

(A) செயப்பாட்டு வினை   (C) தன்வினை

(B) செய்வினை                      (D) பிற வினை

(A) செயப்பாட்டு வினை

 

50. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை

(A) துவ்வாமை என்னும் சொல் குறித்து எழுதுக

(B) துவ்வாமை என்பதன் பொருள் சேராமை என்பது சரியா?

(C) துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?

(D) துவ்வாமை எதனால் வரும்?

(C) துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?

 

51. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

(A) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

(B) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

(C) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

(D) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

(D) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

 

52. வினைகளின் பொருளை கண்டறி.

பணித்து, பணிந்து

(A) பணிந்து நடந்தால் உயர்வு வரும்

(B) ஒற்றுமையே உயர்வு

(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்

(D) பணிதலும், பணித்தலும் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்

(C) மன்னன் வேலை செய்யப் பணித்ததால் மக்கள் பணிந்து வேலையைத் தொடர்ந்தனர்

 

53. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிக

சரியான தொடரைத் தேர்ந்தெடு.

அழித்து - அழிந்து

(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்

(B) மரங்கள் அழித்ததால் மனிதன் அழிந்தான்

(C) மரங்கள் அழியாததால் மனிதன் அழிந்தான்

(D) மரங்கள் அழிந்ததால் மனிதன் அழித்தான்

(A) மரங்களை அழித்ததால் மனிதன் அழிந்தான்

 

54. சரியான தொடரைத் தேர்ந்தெடு

பணிந்து - பணித்து

(A) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்

(B) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார் 

(C) பெரியோரைப் பணித்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணிந்தார்

(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்

(D) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்ய பணித்தார்

 

55. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.

(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்

(B) மீனை சாண்டியாகோ பிடித்தார் மிகப்பெரிய

(C) சாண்டியாகோ பிடித்தார் மீனை மிகப்பெரிய

(D) பிடித்தார் சாண்டியாகோ மிகப்பெரிய மீனை

(A) சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்

 

56. இருவினைகளின் பொருள் வேறுபாடறிக.

சேர்த்து - சேர்ந்து

(A) சேர்ந்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்

(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்

(C) சேர்ந்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்

(D) சேர்த்து வைத்த பொருளை சேர்த்து தேடினர்

(B) சேர்த்து வைத்த பொருளை சேர்ந்து தேடினர்

 

57. ஏறுகோள் பற்றி குறிப்பிடும் காப்பியம் எது?

(A) சிலப்பதிகாரம்    (C) சீவகசிந்தாமணி

(B) மணிமேகலை      (D) வளையாபதி

(A) சிலப்பதிகாரம்

 

58. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்படும் சங்க இலக்கிய நூல்?

(A) குறுந்தொகை   (B) கலித்தொகை

(C) அகநானூறு         (D) நற்றிணை

(B) கலித்தொகை

 

59. புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகை நூல்?

(A) இலக்கியம்     (C) இலக்கணம்

(B) காப்பியம்       (D) சிற்றிலக்கியம்

(C) இலக்கணம்

 

60. எருதுகட்டி என்பது ……….. நிகழ்வு

(A) ஏறுகட்டு         (C) கோள் ஏறு

(B) எருதுகட்டு     (D) மாடுதழுவுதல்

(D) மாடுதழுவுதல்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top