TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 13
41. பேச்சுவழக்கு - எழுத்து வழக்கு: ஒடம்பு
(A) ஒடம்பு – உடும்பு (C) ஒடம்பு -ஊடம்பு
(B) ஒடம்பு – உடம்பு (D) ஒடம்பு - உயிர்
(B) ஒடம்பு – உடம்பு
42. பேச்சுவழக்கு - எழுத்துவழக்கு மாம்பழம் சாப்ட்டியா?
(A) மாம்பழம் சாப்பிட்டாயா? (C)
மாம்பழம் சாப்பிடாயா?
(B) மாம்பழம் சாப்பிடு (D)
மாம்பழம் தின்கிறேன்
(A) மாம்பழம் சாப்பிட்டாயா?
43. பொருள்களை எண்ணும் இடங்களில் ……………… வரும்.
(A) காற்புள்ளி (,) (C)
முக்காற் புள்ளி (:)
(B) அரைப்புள்ளி (;) (D) முற்றுப்புள்ளி (.)
(A) காற்புள்ளி (,)
44. நிறுத்தற்குறிகளை அறிதல்:
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) முத்தமிழ் இயல் இசை நாடகம்.
(B) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
(C) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.
(D) முத்தமிழ், இயல் இசை நாடகம்
(B) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
45. சரியான நிறுத்தற்குறியிடப்பட்ட தொடரைக் கண்டறிக.
(A)
"நூல் பல கல்", என்பர் பெரியோர்.
(B) திருக்குறள் அறம்; பொருள்; இன்பம்
என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
(C) திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
(D) நூலகத்தின் பயன் அறிவோம்: அறிவு வளம் பெறுவோம்.
(A) "நூல் பல கல்", என்பர் பெரியோர்.
46.
"பைம்பொழில்" என்ற ஊர்ப் பெயரின் மரூஉவைக் கண்டறிக.
(A) பொழிச்சலூர் (C) பையனூர்
(B) பம்புளி (D) பொழிலூர்
(B) பம்புளி
47. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
'பூவிருந்தவல்லி'
(A) பூந்தர் தோட்டம் (C) பூந்தமல்லி
(B) பூவிருந்தம் (D) பூ வல்லி
(C) பூந்தமல்லி
48. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
(a) செக் (1) பற்று அட்டை
(b) டிமாண்ட் டிராஃப்ட் (2) காசோலை
(c) டிஜிட்டல் (3) மின்னணு மயம்
(d) டெபிட் கார்டு (4) வரைவோலை
(a)
(b) (c) (d)
(A) 3
1 2 4
(B) 1
2 3 4
(C) 2
4 3 1
(D) 4
3 2 1
(C) 2 4 3 1
49. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுது:
'எஸ்கலேட்டர்'
(A) மின்தூக்கி (C) மின்படி கட்டு
(B) மின் ஏணி (D) இயங்கு படிகட்டு
(C) மின்படி கட்டு
50. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்:
வான்வெளியில் ஏற்பட்ட நிகழ்வை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
(A) பூரிப்பு (C) வியப்பு
(B) எக்களிப்பு (D) மகிழ்ச்சி
(C) வியப்பு
51. விடை வகைகள்:
"நீ விளையாடவில்லையா?" என்ற வினாவிற்குக் 'கால் வலிக்கும்' என்று கூறுவதை
உரைப்பது?
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) உறுவது கூறல் விடை
(D) ஏவல் விடை
(C) உறுவது கூறல் விடை
52. கீழ்க்கண்ட பேச்சு வழக்குச் சொல்லை எழுத்து வழக்கு சொல்லாக மாற்றுக.
'நான் நேத்து வந்த
(A) நான் நேற்று வந்த
(B) நான் நேற்று போனேன்
(C) நான் நேற்று வந்தேன்
(D) நான் நேத்து வந்து
(C) நான் நேற்று வந்தேன்
53. 'நீ பாடவில்லையா? ' என்ற வினாவிற்கு 'வாய் வலிக்கிறது' என்று உரைப்பது
(A) இனமொழி விடை
(B) உறுவது கூறல் விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
(C) உற்றது உரைத்தல் விடை
54. கலைச்சொல் அறிக:
WRITS
(A) சட்டம் (C) சட்ட முறைகள்
(B) சட்ட ஆவணங்கள் (D) சட்ட திருத்தங்கள்
(B) சட்ட ஆவணங்கள்
55. கலைச்சொல் அறிக:
'AGRO
INDUSTRY'
(A) வேளாண்மைத் தொழில் (C) வேளாண் புள்ளி விவரங்கள்
(B) வேளாண் கைக் கருவிகள் (D) வேளாண் தொழிற்கூடங்கள்
(A) வேளாண்மைத் தொழில்
56.
"விழலுக்கு இறைத்த நீர் போல" என்ற சொற்றொடரில் உவமை
விளக்கும் பொருள்?
(A) ஒற்றுமையின்மை (C) எதிர்பாரா நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு (D) பயனற்ற செயல்
(D) பயனற்ற செயல்
57. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக: நெல்லிக்காய்
மூட்டையைக் கொட்டினாற் போல
(A) ஒற்றுமையின்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) பயனற்ற செயல் (D) எதிர்பாரா நிகழ்வு
(A) ஒற்றுமையின்மை
58. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
'வேலியே பயிரை மேய்ந்தது போல' -
உவமை கூறும் பொருள் தெளிக.
(A) கடமை தவறுதல் (C) பொறுப்புணர்வு
(B) கடமை (D) வெறுப்பு
(A) கடமை தவறுதல்
59. சத்யா வீணை வாசித்தாள் - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
(A) பிறவினைத் தொடர் (C) செயப்பாட்டு வினைத் தொடர்
(B) செய்வினைத் தொடர் (D) உணர்ச்சித் தொடர்
(B) செய்வினைத் தொடர்
60. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது:
பந்தை என்னிடம் உருட்டினான்.
(A) தன்வினை வாக்கியம் (C) பிறவினை வாக்கியம்
(B) செய்வினை வாக்கியம் (D) செயப்பாட்டு வினை வாக்கியம்
(C) பிறவினை வாக்கியம்